Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 9, 2016

பள்ளி வாகன விபத்தை தடுக்க களமிறங்குமா போக்குவரத்து துறை?

ாள்08ஜூன்201623:06தமிழகத்தில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே வராத நிலையில், விபத்துகள் நடக்கத் துவங்கி உள்ளன. பள்ளி வாகன பாதுகாப்பு விஷயத்தில், போக்குவரத்து துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

திருப்பூரை அடுத்த விஜயாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனம், நேற்று, இந்திரா நகர் பகுதியில் சென்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20 மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.தமிழகத்தில், 26 ஆயிரத்து, 400 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே கொண்டு வரப்படவில்லை. இந்த சூழலில் தான், இந்த விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. இதனால், ஆய்வுக்கு வராத வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறதா என்பதை, போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர், கல்வித் துறை அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், பெற்றோர் -- ஆசிரியர் சங்க பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்ற போக்குவரத்து குழு இருக்க வேண்டும்.இந்த குழு, வாகனம் மற்றும் ஓட்டுனர் உடற்தகுதி நிலை குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிகள் திறந்து, ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இந்த குழு ஆலோசனைகூட்டம் நடத்தியிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் போக்கு வரத்து குழுவே அமைக்கவில்லை என்பது தான் தற்போதைய நிலை. இனியாவது போக்குவரத்து துறை விழித்துக் கொண்டு, இவற்றை சரி செய்யவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி