Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது. இதில், பேரவைத் தலைவராக ப.தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருவரும் தங்களதுவேட்புமனுக்களை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் ஏற்கப்படுவதாக ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இருவரின் வேட்புமனுக்களையும் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்துள்ளார். பேரவைத் தலைவராக ப.தனபால் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தாற்காலிகத் தலைவராக உள்ள எஸ்.செம்மலை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் கூடும் பேரவைக் கூட்டத்தில் வெளியிடுவார். தொடர்ந்து அவர்களின் பதவியேற்பு நடக்க உள்ளது.பின்னர் அவர்களை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் பேச உள்ளனர். பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றதும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி. ஜெயராமன் தேர்வானதற்கான அறிவிப்பை தனபால் வெளியிடுவார். அதன்பின்னர், தனபால் ஏற்புரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் மே 25-ஆம் தேதி கூடியது. அந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள்பதவியேற்பு நடைபெற்றது. அதன்பின்னர், அந்தக் கூட்டத்தின் நீட்சியாக இப்போது மீண்டும் பேரவை கூடுகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி