Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 17, 2016

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு.

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பயனடையும்வகையில் நாடு முழுவதும் குறைந்த செலவில் பேசும் வகையில்இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பு கடந்த ஜூன் 1, 2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகை ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.நாடு முழுவதும் இலவச ரோமிங் முறை அமலுக்கு வந்ததால், தற்போது ஒரு சிம்கார்டு மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்களும், நாடு முழுவதும் சுமார் 10 கோடி பேரும் பயனடைந்து வந்தனர்.தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல், இந்த திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்திய பின்னர் இந்த போட்டியை சமாளிக்க ஒரு தனியார் நிறுவனமும் தென்இந்தியாவிற்கான இலவச ரோமிங் வசதியை அறிமுகப்படுத்திள்ளது.

இந்நிலையில் இலவச ரோமிங் வசதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை இணைப்புக்குள் வந்துள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment :

  1. MPC TRB coaching center ERODE
    Starts new batch for PG TRB (Mathematics only) from June 19th sunday onwords
    Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
    Contact: 9842771667, 9042071667
    " Study material available"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி