Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 9, 2016

விருதுநகர் பள்ளிகள்: மாணவர்களே உஷார்

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் அங்கீகாரம் பெறாமல் 22 தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . அப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவோ, படிப்பை தொடரவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி அரசின் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், சாத்துாரில் கம்மவார் மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளி , ஸ்ரீவில்லி புத்துாரில் மிலிட்டரிமேன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, விருதுநகரில் மாரியம்மன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வெம்பக்கோட்டையில் கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, குட்ஷெபர்டு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடாது.இதுபோல் திருச்சுழியில் ரோஜா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பத்ரகாளியம்மன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நரிக்குடியில் மகாத்மா மழலையர் மற்றும்தொடக்கப்பள்ளி, அருப்புக்கோட்டையில் கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஜி.கே. இன்டர் நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,காரியாபட்டியில் பொன்பழனி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,ராஜபாளையத்தில் லயன்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, விக்டரி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அல்ஹூதா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,நவ்ரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கிரேஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஸ்ரீராகவேந்திரா வித்யாமந்திர்மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நாடார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றன.

சிவகாசியில் ஆற்றலரசு கே. ஆறுமுகசாமி நாடார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கே.வி.டி.எஸ். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வத்திராயிருப்பில் ஸ்ரீவிவேகானந்தா வித்யாமந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என மாவட்டத்தில் 22 தொடக்கப் பள்ளிகள் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி