Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 10, 2016

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் ரயில்வே ஊழியர் சங்கம் அறிவிப்பு.

ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. தெற்கு ரயில்வே மஸ்துார் சங்கம், தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம், தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள், வேலை நிறுத்த நோட்டீசை, நேற்று காலை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரியிடம் அடுத்தடுத்து வழங்கினர்.

அடிப்படை சம்பளம் உயர்வு, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் ரயில்வே ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக, நேற்று, சென்னை, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு, 2,000 ஊழியர்களுடன் நேரில் சென்று நோட்டீசை வழங்கினர்.

இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் சங்க பொதுச் செயலர் கண்ணையா கூறியதாவது:எங்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்படைவர். இதை மத்திய அரசுஉணர வேண்டும். மத்திய அரசுடன், ஐந்து முறை பேச்சு நடத்தியும் பயனில்லை. ஆகையால், திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி