Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 26, 2016

பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை நாளை பொதுப்பிரிவு கவுன்சிலிங்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ.,- பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கடந்த, 23ல் துவங்கியது.

முதல் நாளில், விளையாட்டு பிரிவுமாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. நாளை முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும்; ஜூலை, 23, 24ம் தேதிகளில்தொழிற்கல்வி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. மொத்தம், 524 கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.தினமும் காலை, 7:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, எட்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்குக்கு வரும் மாணவியர் பெண் துணையுடன் வந்தால், அவர்கள் தங்குவதற்கு பல்கலை வளாகத்தில் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்குக்கான அழைப்பு கடிதங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் அதைப் பார்த்து, குறிப்பிட்ட நேரத்துக்கு, இரண்டு மணி நேரம் முன் பல்கலை வளாகத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல்கலை வளாகத்தில் விசாரணை மையம், உடற் பரிசோதனை மையம் மற்றும் கல்லூரி வைப்புத் தொகை செலுத்துவதற்கான வங்கி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு வங்கிகளின் சார்பில், கடன் வசதிக்கான உதவி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளே 50 சதவீதம் காலி : முதல் நாளில் நடந்த கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவில் காலியான, 500 இடங்களுக்கு, 1,195 பேர் அழைக்கப்பட்டனர்; 174 பேர் வரவில்லை.வந்தவர்களில், 669 பேர் விருப்பமான இடம் மற்றும் பாடப்பிரிவு கிடைக்காமல், 'இடங்கள் வேண்டாம்' என்று ஒதுக்கி விட்டனர். வெறும், 352 பேர் மட்டுமே இட ஒதுக்கீடு ஆணைபெற்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி