Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 8, 2016

பழைய பஸ் பாஸ் செல்லும்; அமைச்சர் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு புதிய, பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டு பஸ் பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் கூறியதாவது:

* அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் வருவாயை பெருக்க, அனைத்து பஸ்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்தில், பயணிகள் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க வேண்டும்

* நடப்பு, 2016 - 17ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ், மாணவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாசை பயன்படுத்தி, மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்அனைத்து பஸ்களும் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின், பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்

* சிக்கனமற்ற வழித்தடங்களை ஆய்வு செய்து, பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில்,சீரமைப்பு செய்ய வேண்டும். பின், தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்

* டிரைவர்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

* வருமானத்தை அதிகரிக்க, விளம்பரம், பார்சல் சர்வீஸ் உட்பட, நவீன வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி