Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 30, 2016

ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!

கேரளாவில் ஹெல்மெட்  அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

இது குறித்து கேரள போக்குவரத்து ஆணையர் தோமின் ஜே  தக்கன்சேரி கூறுகையில், '' கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டில் நடந்த 14,482 இருசக்கர வாகன விபத்துகளில்,  1,330 பேர் பலியாகியுள்ளனர்.  இதில் 80 சதவீத உயிரிழப்பு, பலத்த காயம் ஏற்படுவதால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு,  ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோல் பங்குகளுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  விரைவில் இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்''  என தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி