sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 24, 2016

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங், சென்னையில், அண்ணா பல்கலை வளாகத்தில் இன்று துவங்குகிறது.

கவுன்சிலிங் முன்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அருகில் உள்ள மண்டல அலுவலகங்களில் நடந்தது. சில ஆண்டுகளாக சென்னையில் மட்டும் நடப்பதால், வெளியூர் மாணவர்களுக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், தங்களின், 'ஆன்லைன்' அழைப்பு கடிதத்தை, அரசு பஸ்சில் காட்டினால், மாணவருக்கும், அவருடன் வரும் ஒருவருக்கும், கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்க, போக்குவரத்து மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆன்லைன் கடிதம் என்பதால், கவுன்சிலிங்கிற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு மட்டுமே, இந்த சலுகை கிடைக்கும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி