Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 14, 2016

'பேங்க் ஆப் இந்தியா' வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி


மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 517 கடன் அதிகாரி, மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.

பணி:கடன் அதிகாரி (Manager-Credit) - 217
பணி:மேலாளர் - 200
பணி:முதுநிலை மேலாளர் 100

தகுதி:60 சதவீத மதிப்பெண்களுடன் பிகாம், எம்பிஏ அல்லது வங்கி மேலாண்மையில் முதுநிலை டிப்ளமா அல்லது வங்கி நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமா அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்:மேலாளர் பணிக்கு 5 ஆண்டுகளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 8 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:கடன் அதிகாரி பணிக்கு 21 - 30-க்குள்ளும், மேலாளர் பணிக்கு 28 - 35-க்குள்ளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 30 - 38-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:14.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.bankofindia.co.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment :

  1. MPC TRB coaching center ERODE
    Starts new batch for PG TRB (Mathematics only) from June 19th sunday onwords
    Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
    Contact: 9842771667, 9042071667
    " Study material available"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி