Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 4, 2016

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் அனுப்ப இன்று கடைசி நாள்

அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், 15முதல், 'ஆன் - லைனில்' விண்ணப்ப பதிவு துவங்கியது; மே, 31ல் முடிந்தது; 2.52 லட்சம் பேர் பதிவு செய்தனர்; அவர்களில், 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.

நேற்று வரை, 1.25 லட்சம் பேரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அண்ணா பல்கலைக்கு வந்துள்ளன.

விண்ணப்பங்களை அனுப்ப, இன்று கடைசி நாள்; இன்று மாலை, 6:00 மணிக்குள் வழங்கலாம். கடந்த ஆண்டுகளில், கடைசி நாளில் தபாலில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களும், ஒரு சில நாட்கள் தாமதமாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.அதேபோல், இந்த ஆண்டும், ஜூன், 4ம் தேதி தபாலில் பதிவு செய்த விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி