Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 8, 2016

சாதனை மாணவர்கள் விருது பெற பாரதி யுவகேந்திரா அழைப்பு.

பாரதி யுவகேந்திரா அமைப்பால் வழங்கப்படும் யுவ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதுகளுக்காக தகுதியான மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் அரிமா நெல்லை பாலு விடுத்துள்ள அறிக்கை:

படிப்பு மற்றும் பாட்டு, நடனம், கவிதை, பேச்சு உள்ளிட்ட இதர தனித் திறமைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு யுவ கலாபாரதி விருதும், கல்லூரி மாணவ - மாணவியருக்கு சுவாமி விவே கானந்தர் விருதும் பாரதி யுவகேந்திராவின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

விருதுக்குத் தகுதியான மாணவர்கள் தங்களது சாதனை குறித்த சான்றிதழ்களுடன் ’பாரதி யுவ கேந்திரா, எஃப் 171,சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை 625 016’ என்ற முகவரிக்கு இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி