Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 27, 2016

BSNL நிறுவனத்தில் 2700 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL)  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7 தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 7-1/2016-Rectt

பணி:Junior Engineer (JE)

மொத்த காலியிடங்கள்:2,700

சம்பளம்:மாதம் ரூ.13,600 - 25,420

வயதுவரம்பு:10.08.2016 தேதியின்படி 18 -30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:பொறியியல் துறையில்Telecommunications, Electronic, Electrical, Radio, Computer, Instrumentation, Information Technology பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி அல்லது பி.எஸ்சி, எம்,எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.externalexam.bsnl.co.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:25.09.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையம்:சென்னைஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:10.07.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:10.08.2016

மேலும் தொலைதொடர்பு வட்டங்கள் வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி