sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 27, 2016

DTEd:இடைநிலை ஆசிரியர் பயிற்சி: இன்று தரவரிசைப் பட்டியல் - கலந்தாய்வு ஜூலை 4-ல் தொடங்குகிறது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடை பெற உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங் களில் ஆன்லைன் வழி கலந்தாய்வு நடத்தப்படும் மையங்கள் ஆகிய விவரங்கள் இணைய தளத்தில் (www.tnscert.org) 27-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும்.கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் திங்கள்கிழமை முதல் அனுப்பப்படும். மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ஜூலை 4 (திங்கள்கிழமை) - ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு மற்றும் உருது வழியில் படிக்க விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள்,சிறப்புப் பிரிவினர். (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள் மற்றும் முன்னாள்ராணுவத்தினரின் மகன், மகள்)கலந்தாய்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். கலந்தாய்வுக்கு வருவோர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்று, சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கலந்தாய்வு

ஜூலை 4-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும். பாடப்பிரிவு வாரியான கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:-

ஜூலை 5 (செவ்வாய்க்கிழமை) - தொழிற்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள்
ஜூலை 7 (வியாழக்கிழமை) - தொழிற்பிரிவு மாணவிகள்
ஜூலை 8 (வெள்ளிக்கிழமை) - கலைப்பிரிவு மாணவிகள்
ஜூலை 9 (சனிக்கிழமை) - அறிவியல் பிரிவு மாணவிகள்

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி