Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 26, 2016

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.

நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பது:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வரவேண்டும்.ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவுப் பணி ஆக. 1 ஆம் தேதி வரை அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் 15  நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், ‌h‌t‌t‌p‌s:​‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி