Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 26, 2016

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு ஆக. 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆக.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் 31 சத்துணவு அமைப்பாளர், 155 சமையல்உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. காலிப் பணியிடங்களுக்கான இனச் சுழற்சி விவரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.  சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவினர் மற்றும் ஆதி திராவிடர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2016 அன்று 21 முதல்40 வயதுக்குள், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குள்பட்டு இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பழங்குடியினருக்கு எழுத,படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பணியிடத்துக்கும் விண்ணப்பதாரின் குடியிருப்புக்கும் 3 கி.மீ. தூரத்துக்குள்பட்டு இருக்க வேண்டும்.  தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வி, வயது, இருப்பிடம், ஜாதி மற்றும் முன்னுரிமை சான்றிதழ் நகல்களுடன் ஆக.10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி