Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 10, 2016

ஜூலை 15-இல் காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவு.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த நாளையொட்டி தமிழக அரசின் உத்தரவின்பேரில் 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நிதியின் மூலம் மாவட்டங்கள்தோறும் 2 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி