Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 8, 2016

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பதவி: ஜூலை 15-இல் விண்ணப்பம் விநியோகம்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பம் ஜூலை15-ஆம் தேதி தொடங்கவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர்17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை15முதல்30-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) அனைத்து நாள்களிலும் காலை10மணி முதல் மாலை5.30வரை வழங்கப்படும். விண்ணப்ப படிவக் கட்டணமாக ரூ.50செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.500செலுத்தி விண்ணப்பத்துடன் வழங்கப்படும் ரசீதுடன் வங்கிகளில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை30-ஆம் தேதி மாலை5.30மணிக்குள் அதே பள்ளியில் சமர்ப்பித்து ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணமாக ரூ.250மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments :

  1. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099 study materials available. DIET Pg trb English study materials available

    ReplyDelete
  2. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099 study materials available. DIET Pg trb English study materials available

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி