Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 31, 2016

பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி

அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது.
இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.இந்நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங்நடத்தப்பட்டது.

இதன் முடிவில் மொத்தம், 89,760 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் அதிகபட்சமாகமெக்கானிக்கல் படிப்பு, 21,137 பேர்; இ.சி.இ., எனப்படும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, 16,413; கம்ப்யூட்டர் சயின்ஸ், 15,387; எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், 10,136; சிவில், 10,088 பேர் சேர்ந்துள்ளனர். இது தவிர, ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மெக்கானிக்கல் தமிழ் வழி வகுப்பில், 200 பேரும், சிவில் தமிழ் வழியில், 195 பேரும் சேர்ந்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி