Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 21, 2016

இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு.

'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, 2014 ஜூலையில் வெளியானது.

அப்போது, 139 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பதாரர் வயது வரம்பு, 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

192 ஆக...: அதனால், பேராசிரியர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு முடித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயது வரம்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வயது வரம்பு, 57 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, உதவி பேராசிரியர் நியமனத்துக்கான புதிய அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அதில், பணியிடம் எண்ணிக்கை, 192 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய விதிமுறைகள் : அதன்படி ஆகஸ்ட், 17ல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. செப்டம்பர், 7க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர், 22ல்தேர்வு நடத்தப்படும்.

இதில், 2014ம் ஆண்டு அறிவிப்பின் படி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால், புதிய விதிமுறைகளை அவர்கள் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, http://trb.tn.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி