Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 28, 2016

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை - மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம் என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளி களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
இதற்கான கல்விக் கட்டணச் செலவை (அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்) பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம். நடப்பு கல்வி ஆண்டில் (2016-2017) 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி ஜுன் 30-ம் தேதி முடிவடைந்தது.

காலியிடங்கள்

 தற்போது அந்த இடஒதுக் கீட்டில் உள்ள இடங்களில் காலியிடங்கள் இருந்தால் அவற்றில் நவம்பர் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள லாம்.இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டிருப்பதாக மெட்ரிக் பள்ளிஇயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி