sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 27, 2016

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி ஜூலை 29-ல் வேலைநிறுத்தம்

மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந் ததையடுத்து திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் தனியார்மயமாக்கல் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது மற்றும்வாராக் கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை உடனடியாக வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12, 13-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது.

ஒத்திவைப்பு

ஆனால், இந்த வேலை நிறுத்தத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததையடுத்து வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக ஊழியர் சங்கம் அறிவித்தது. பின்னர் இந்த வேலைநிறுத்தம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கோரிக்கைகள் நிராகரிப்பு

இந்நிலையில், மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் வங்கி ஊழியர் களுடன் நேற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டதால் திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் சி.எச். வெங்கடாசலம் டெல்லியில் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி