sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 5, 2016

கணினி கல்வியில் தமிழகம் பின்தங்கியதால் 39,000 கணினி பட்டதாரிகள் தவிப்பு

கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் நாட்டில் கேரளா முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழக அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாததால், 39 ஆயிரம் பிஎட் கணினி பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 2011-ம் ஆண்டில் 6,7,8,9,10-ம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கான பாடப் புத்தகங்கள், கணினி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. மாணவர், பெற்றோர், ஆசிரியர்களிடம் கணினி கல்வித் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திடீரென கணினி புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. சில மாதங்களில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.

தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டு செயல்படுத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர் களுக்கு கணினிக் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் கணினிக் கல்வி வழங்கப்படுகிறது.இதனால், அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் 39,019 பேர் வேலையில்லாமல் தவிக் கின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன் கூறியதாவது:2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.

கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது.

ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

8 comments :

 1. GROUP-IV-தினசரி தேர்வு-3(05-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

  ReplyDelete
 2. தமிழக அரசு கணினி ஆசிரியர்கள் காலி பணி இடங்களை நிரப்பிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 3. Please fill computer science teachers in all the government schools in tamilnadu. Tamilnadu government is requested to take care of computer science graduates

  ReplyDelete
 4. PLEASE WILL APPOINT COMP.TEACHER TO ALL TYPE OF GOVT SCHOOLS INCLUDING OFFICIAL LEVEL.

  ReplyDelete
 5. computer science subject is very importance to all job and working used.

  ReplyDelete
 6. AS a citizen of INDIA I request you TN govt will take immediate action of to give computer education to the children in all govt schools

  ReplyDelete
 7. TN govt don't play in the children life I request you pl give computer education to the children in all the govt schools.

  ReplyDelete
 8. I am priya working govt school (temporary post) school work elam comp.than WT ABOUT COMP.SCIENCE TEACHER LAST VERA AVAGALAM wastea? Etha gov yan epadi iruku school work elam comp.than bus pass iruthu mail,nomial roll vara..all work comp.staff ku undu ana comp.teacher vendam govt..govt school govt school work panra regular comp.teacher ethu elam sna tha oru life varum etha govt waste totally? Waste…(feeling for comp.science teacher)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி