Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 1, 2016

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகள் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை.

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை கண்காணிப்பது மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணப் பலன்கள் தொடர்பான கோப்புகள் தேங்கிக் கிடப்பதால், காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. அதே போல், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகள் இயங்குகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர், விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

 இதனால், பள்ளிகளை ஆய்வு செய்வது, பள்ளி கல்வித் துறை வழங்கும்உத்தரவுகளை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்துவது, அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 நலத் திட்ட உதவிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்புநிலை பதவி உயர்வு வழங்குவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கோப்புகளை கண்காணிப்பது ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி