Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 21, 2016

தமிழக பட்ஜெட்: 5.35 லட்சம் மாணவர்களுக்கு ரூ.890 கோடியில் லேப்டாப்.

2016-2017 ஆண்டில் ரூ.890 கோடி செலவில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் உரை நிகழ்த்துகையில், ''டிஜிட்டல் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைப்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.இதன்படி, 2016-2017-ம் ஆண்டில் 5.35 லட்சம் மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்துக்காக, 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி