Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 29, 2016

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்.

தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த, கணித உபகரணங்கள் வழங்கும் பொருட்டு ரூ.1.28 கோடி நிதிவழங்க ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மரத்தால் செய்யப்பட்ட 31 உபகரணங்கள் உள்ளடக்கிய 9 தொகுப்புகள் வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.டான்சி நிறுவனம் வழங்கும் இந்தக் கணித உபகரணங்களை, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய வகையில் வைத்து, இருப்புப் பட்டியலை அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து பதிவேடு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விவரங்களையும் தொடக்கக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி