Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 16, 2016

தமிழகம் முழுவதும் 750 ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முதன்முதலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டப்பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.இதைத்தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் திட்டத்தின்கீழ் கல்வி அளிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக் கற்றல் என்ற பாடத்திட்டத்தை எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 தொடக்கப்பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றப்பட்டது.2014-2015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கற்றலை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. ஆங்கில செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்தன. ஆனால் தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே, ஆங்கில வழிக்கல்வியை கற்பித்து வருகின்றனர். கூடுதல் பணி சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழிக்கல்வி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி பாடங்களை கற்க முடியாமல் போகிறது.இதனால் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறுகின்றனர் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

6 comments :

  1. Aided school post in chennai...
    1.B.T ENGLISH (SC-MALE),tet above 90
    2.B.T SCIENCE (MBC),tet above 90
    3.P.G MATHS (SC-MALE)

    ReplyDelete
  2. Aided school post in chennai...
    1.B.T ENGLISH (SC-MALE),tet above 90
    2.B.T SCIENCE (MBC),tet above 90
    3.P.G MATHS (SC-MALE)

    ReplyDelete
  3. தமிழக அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது.

    ReplyDelete
  4. அரசு காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டிய. ஆசிரியர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

    ReplyDelete
  5. அரசு காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டிய. ஆசிரியர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

    ReplyDelete
  6. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியில் பட்டதாரிஆசிரியர் இல்லை.தமிழ்வழிகற்கும் மாணவர்களுடன் ஆங்கிலவழியில் கற்கும் மாணவர்களுக்கும் சேர்த்து பாடம் கற்பிக்கப்படுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி