Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 11, 2016

7-ஆவது ஊதியக் குழு அறிவிக்கை எப்போது?

7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்பதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது.

இதன் மூலம் மத்திய அரசுஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.எனினும், குறைந்தபட்ட ஊதியம் ரூ.18,000 என்பதை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதையடுத்து இந்த கோரிக்கைகளைப் பரிசீலிக்க உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.இதனால், 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வருமா? அல்லது காலதாமதமாகுமா? என்று கேள்வி எழுந்தது.

முக்கியமாக, ஜூலை மாத சம்பளம்,ஓய்வூதியத்துடன் 7-ஆவது ஊதியக்குழுவின் பலன்கள் கிடைக்குமா அல்லது காலதாமதமாகுமா என்ற குழப்பம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்தது.இந்நிலையில் இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவது தொடர்பான அரசு அறிவிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி