Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 1, 2016

B.E: 6,600 பேர் சேர்க்கை

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள்முடிவில் 6,606 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 27-இல் தொடங்கிய பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, ஜூலை 21வரை நடத்தப்பட உள்ளது. இதன் மூன்றாம் நாளான புதன்கிழமையன்று 3,394 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 2,616 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். 762 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 16 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர். இதுவரை மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே அதிகமானோர் விரும்பும் பிரிவாக இருந்து வருகிறது. இந்தப் பிரிவை 1,473 பேர் தேர்வு செய்துள்ளனர். பி.இ. கணினி அறிவியல் பிரிவை 1,056 பேரும், இயந்திர வியல் பிரிவை 1,008 பேரும் மின்னியல் மின்னணுவியல் பொறியியல் பிரிவை 682 பேரும், தகவல் தொழில்நுட்ப பிரிவை 518 பேரும், கட்டடவியல் பிரிவை 420 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி