Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 29, 2016

பள்ளிகளில் தினமும் பால் வழங்கஉற்பத்தியாளர்கள் கோரிக்கை

சேலம்;'பள்ளி குழந்தைகளுக்கு தினமும் பால் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் செங்கோட்டுவேல் பேசியதாவது:உற்பத்தியாகும் பாலை முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு, தினமும் பால் வழங்க வேண்டும்.நிலுவையில்லாமல், பால் பணப் பட்டுவாடா செய்ய வேண்டும். உற்பத்தி செலவு, 30 சதவீதம் உயர்ந்துள்ளதால், பசும்பால் லிட்டருக்கு, ஐந்து ரூபாய், எருமைப்பால் லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும். ஆவின் நடவடிக்கை அனைத்தும், தனியார் பால் நிறுவனங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி