Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 7, 2016

தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.இதுகுறித்து கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:

இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவுமூலம் தமிழகத்தில் உள்ள 57 மையங்களில் கல்வியாண்டு மற்றும்துணைத் தேர்வுகள் மே 21-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள்கள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

முதுநிலை, இளநிலை, பட்டயம், சான்றிதழ் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை www.tamiluniversity.ac.in, www.tamiluniversity.dde.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.தொலைநிலைக் கல்வித் தேர்வு மூலம் நடைபெறும் அனைத்து பாடங்களுக்கும் உரிய காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி