Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 26, 2016

போலி பணி நியமன ஆணை : சத்துணவு அமைப்பாளர் கைது

அரசு வேலைக்காக, 1 லட்சம் ரூபாய் வாங்கி, போலி பணி நியமன ஆணை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன், 53. அங்குள்ள அங்கன்வாடியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், சில மாதங்களுக்கு முன், சின்னசந்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ஜானகிக்கு, சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். இதற்காக ஜெயக்குமாரிடம், 1 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து, ஜெயக்குமார் கேட்டதற்கு, அவரிடம் பணி நியமன ஆணை ஒன்றை ராஜராஜன் வழங்கினார். பள்ளிக்கு கொண்டு சென்றபோது, அதை சரிபார்த்த அலுவலர்கள், போலி ஆணை என்று தெரிவித்தனர்.ஜெயக்குமார்புகாரை அடுத்து, களம்பூர் போலீசார், ராஜராஜனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி