Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 25, 2016

நகரங்களில் இணைய சேவை; முதலிடத்தில் தமிழகம்.

நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர்பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இணைய சேவை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும், நகர் பகுதிகளில், 23.1 கோடி பேரும், கிராமப் பகுதிகளில், 11.2 கோடி பேரும் இணைய சேவையை பெறுகின்றனர்.

நகர் பகுதிகளில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், 1.97 கோடி பேரும், டில்லியில், 1.96 கோடி பேரும், இணைய சேவை சந்தாதாரர்களாக உள்ளனர். கர்நாடகாவில், 1.70 கோடி பேர் இணைய சேவையைப் பெறுகின்றனர்.கிராமப் பகுதிகளில் இணைய சேவை சந்தாதாரர்கள் கணக்கின்படி, 1.12 கோடி பேருடன் கிழக்கு உத்தர பிரதேச தொலை தொடர்பு வட்டம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், 97 லட்சம் பேரும், ஆந்திராவில், 90 லட்சம் பேரும் இணைய சேவை பெற்று உள்ளனர். கிராமப்புற இணைய சேவையை அதிகரிக்கும் வகையில், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைப்புகள் அளிக்கும் பணி நடந்து வருகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி