Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 13, 2016

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

கால்நடை அறிவியல் படிப்பில், 320 இடங்கள்:

கோழியின வளர்ப்பு, பால்வளத் தொழில் நுட்பம் மற்றும் மீன்வள அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா, 20 இடங்கள், என இப்பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்புகளில், 380 இடங்கள் உள்ளன.இப்படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்தோருக்கான, தரவரிசைப் பட்டியல், ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில், இன்று கவுன்சிலிங் துவங்குகிறது. முதல் நாளில், விளையாட்டு வீரர்கள், பிளஸ் 2 தொழில் படிப்பு படித்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

இரண்டாம் நாளில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.அன்றைய தினம், தரவரிசையில் முதல், 10 இடங்களை பிடித்தவர்களுக்கு கால்நடை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சேர்க்கை கடிதம் வழங்குகிறார். முதல், இரண்டு நாட்கள், கால்நடை அறிவியல் படிப்பு களுக்கும், இறுதி நாளில், இதர மூன்று படிப்பு களுக்கான கவுன்சிலிங்நடைபெறும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி