sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 22, 2016

தொல்லியல் துறையில் பட்டய படிப்பு

இந்திய தொல்லியல் துறையில், முதுநிலை பட்டயப் படிப்புக்கு, தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரண்டு ஆண்டு படிப்பான இதில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், பண்டைய, இடைக்கால, தற்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல், நிலயியல் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்பை முடித்த, 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகையாக, மாதம், 8,000 ரூபாய் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்வு, வரும் செப்டம்பர், 5ம் தேதி; நேர்முகத்தேர்வு, 7 முதல்,9ம் தேதி வரை நடைபெறும். இந்திய தொல்லியல் துறை இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகள் இணைத்து, புதுடில்லியில் உள்ள, இந்திய தொல்லியல் துறை கல்வியக இயக்குனர் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சேர, ஆகஸ்ட், 7ம் தேதி கடைசி நாள்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி