Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 7, 2016

புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சி ஆசிரியர்களுக்கு தேவை:ஆளுநர் ரோசய்யா

புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சியே ஆசிரியர்களின் தற்போதைய தேவையாக இருக்கிறது என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (எம்.சி.சி.) வளாக மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 32-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.இதில், அவர் பேசியதாவது:-

மாணவர்களுக்கான கற்றல் வசதிகள், கற்பித்தல் பயிற்சிகள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியனதான் சிறந்தகல்விக் கூடங்களுக்கு தனித்துவத்தை வழங்குகிறது.கல்வித் துறைக்கு ஆசிரியர்களின் புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சி தற்போதைய தேவையாக உள்ளது. எனவே, மதிப்பீட்டு முறையில் புத்தாக்க முயற்சிகள், தேவைக்கேற்ற கல்விமுறையும்,பிற கல்வி நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியும் பள்ளிகளில் அதிகரித்து வருவது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.எம்சிசி இயக்குநர்கள் குழுத் தலைவர் எம்.கே.மேமன், நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன்,தாளாளர் யக்ஞா சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி