Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 11, 2016

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கிஊழயர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச். வெங்கடாசலம், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் தலைமை ஆணையருடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தினரும், அரசுடைமை வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் போராட்டத்தால் வங்கிச் செயல்பாடுகள் முழுமையாக பாதிக்கப்படும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி