Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 18, 2016

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்தள்ளி வைக்க ஆணையம் திட்டம்.

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளதால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அதற்கு முன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக இருந்தது எனக்கூறி, இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது. பின், இரண்டுதொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்தது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் இறந்தார். அதனால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.இந்த தொகுதிகளில், ஆறுமாதங்களுக்குள் அதாவது நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், அக்டோபர் இறுதியில் முடிவடைகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக உள்ளதால் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னரே அரவக்குறிச்சிஉள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:வரும், 21ல், தமிழக சட்டசபை கூடுகிறது. இதில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படஉள்ளது. பட்ஜெட்டில் சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களில் வெற்றி பெற ஆளுங்கட்சி விரும்புகிறது.அத்துடன் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தேர்தல் நடத்துவதில் ஆளுங்கட்சி தரப்பு ஆர்வம் காட்டவில்லை. அதனால், டிசம்பரில் தான், மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி