Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 31, 2016

வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார்.
சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன். 16 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

பிளஸ் 2 பாடங்களின் முக்கிய அம்சங்களை தொகுத்து, மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற உதவி வருகிறார். கடந்தசில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவர்களின் பெற்றோருக்கு, மொபைல் போன் வாயிலாக, பாடத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வந்தார். தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். தன் மொபைல்போன் எண்ணை, மாணவர்களுக்கு வழங்கும் இவர், மாணவர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்கிறார். பின், அந்த குரூப் மாணவர்கள், தங்களது சந்தேகத்தை கேட்டால், வாட்ஸ் ஆப்பில் பதிலளிக்கிறார். மேலும், தாவரவியல் மற்றும் உயிரியலில் உள்ள முக்கிய பாடங்களை, தன்னுடன் பணியாற்றும் உயிரியல் ஆசிரியர் இளங்கோவுடன் இணைந்து,சிறிய தொகுப்பாக தயாரித்துள்ளார். இந்த தொகுப்பை, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் இலவசமாக வழங்கி, மாணவர்கள் மதிப்பெண் பெற வழிகாட்டுகிறார்.

தன் சேவை குறித்து, ஆசிரியர் ஆர்.சவுந்தரபாண்டியன் கூறியதாவது: பாடங்களில் முக்கிய அம்சங்களை, தனியாக பிரித்து கொடுக்கும்போது, அதை மாணவர்கள் எளிதாக படிப்பர். நான்தயாரித்த தொகுப்புகள், மாணவர்களுக்கு பயன்பட்டதால், அதை இலவசமாகவே வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்கிறேன். பள்ளி வேலை நேரத்தில், என் வகுப்பில் மட்டுமே பாடம் எடுப்பேன். மற்ற நேரங்களில்தான், சமூக வலைதளங்களில் பதிலளிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி