Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 20, 2016

மத்திய அரசின் உயரதிகாரிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டுஇன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுதந்திரமாக இயங்க அரசு அதிகாரிகளை அனுமதிக்க முடிவு.

மத்திய அரசின் உயரதிகாரிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு உயரதிகாரிகள் தொலைக்காட்சி, சமூக வலை தளங்கள், இதர தொலைத் தொடர்பு செயலிகள் வழியாக கேலிச்சித்திரம் உட்பட எவ்வகை யிலும் அரசை விமர்சிக்கக் கூடாது என மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் விதிமுறை வரையறுத்துள்ளது.தற்போது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வனத்துறை) உள் ளிட்ட உயரதிகாரிகள் சமூக வலை தளங்களில் சுதந்திரமாக செயல் படும் விதத்தில், இதுதொடர்பான அனைத்திந்திய பணிகள் (நடத்தை) சட்டம் 1968-ல் சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. பொது அமைப்புகள், நிறுவனங் களால் ஏற்பாடு செய்யப்படும் செலவில்லாத பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க குடிமைப் பணி அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கிறது.

ஆனால், அதிகாரிகள் தங்களின் இரண்டு மாத அடிப் படை சம்பளத் தொகையை விட அதிகமான மதிப்புடைய வீட்டு உபயோகப்பொருட்கள், வாகனங்கள் இதர வசதிகள் தங்களுக்குச் சொந்தமாக இருப்பின் அதுகுறித்த விவரங்களைஅளிக்க வேண்டும் என்ற ஷரத்து இந்த திருத்தத்தில் சேர்க்கப்படவுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி