Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 27, 2016

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுநினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை: இன்று மணிமண்டபம்அடிக்கல் நாட்டு விழா.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பேக் கரும்பு நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் நேற்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். அவரது சிலை திறப்பு, மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
முன்னாள் குடியரசுத் தலை வர் அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனி டையே ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் மத்திய அரசு சார்பில் அவரது சிலை திறப்பு, மணிமண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா,கலாம் சாதனைகள் குறித்த கண்காட்சி தொடக்கம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறு கிறது.நிகழ்ச்சிக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மத்திய இணை அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இவ்விழாவுக்காக சென்னை குரோம்பேட்டையில் தயாரிக்கப் பட்ட கலாம் வெண்கலச் சிலை கடந்த திங்கட்கிழமை காலை பேக் கரும்புக்குக் கொண்டுவரப்பட்டது. 300 கிலோ எடையும், 7 அடி உயர மும் கொண்ட சிலை நேற்று அதிகாலை பீடத்தில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து கலாமின் மூத்த சகோத ரர் முத்து மீரா லெப்பை மரைக்கா யர், இவரது மகன் ஜெயினுலாபு தின், பேரன் ஷேக் சலிம் மற்றும் குடும்பத்தினர் காலை 10 மணிக்கு சிறப்புப் பிரார்த் தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாய மக்க ளும் கலந்துகொண்ட னர். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக ராமேசுவரம் பர்வதவர்த் தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேக்கரும்பு வரை கலாம் நினைவு அமைதிப் பேரணி நேற்று நடைபெற்றது.

புறக்கணிக்கப்படும் கலாம் கண்டுபிடிப்பு?

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாமுடன் படித்தவரும், கலாமின் நண்பராருமான கிருஷ்ணமாச்சாரி கூறியதாவது:4 கிலோ எடை கொண்ட இரும்பு செயற்கைக் கால்களை குழந்தைகள்அணிவதைப் பார்த்து கவலையில் ஆழ்ந்த கலாம், அவர்களுக்காக400 கிராமில் எடை குறைந்த செயற்கைக் கால்கள் தயாரித்தார். இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் எனும் கருவியை குறைந்த விலையில் தயாரிக்க உதவினார்.ஏழை எளிய மக்களுக்காக கலாம் கண்டுபிடித்த விலை குறைந்த ஸ்டென்ட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான எடை குறைந்த செயற்கைக் கால்களையும் மருத்துவ உலகம் புறக்கணித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்தால் எடை குறைந்த காலணிகள் மற்றும் ஸ்டென்ட் கருவிகளை அணிந்தவர்கள் இதயத்தில் கலாம் என்றென்றும் வாழ்வார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி