Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 18, 2016

கல்லூரி, பல்கலை தேர்தலில் 'நோட்டா'

சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தலை தொடர்ந்து, கல்லுாரி தேர்தலிலும், 'நோட்டா'வை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியை பிடிக்காதவர்கள், தங்கள்ஓட்டு யாருக்கும் இல்லை என்ற தகவலை பதிவு செய்ய, நோட்டா என்ற வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கல்லுாரி, பல்கலை தேர்தல்களிலும், நோட்டா வசதியை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு விபரம்:

அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளும், தங்களது கல்லுாரிகளில் கண்டிப்பாக மாணவர் பிரதிநிதிக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த தேர்தல்கள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும்.அத்துடன், தேர்தலில், கண்டிப்பாக நோட்டா வசதியையும் அறிமுகம் செய்ய வேண்டும். சில கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், அவ்வாறு அறிமுகம் செய்யவில்லை என, மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி