Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 15, 2016

மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசு நீடித்துள்ளது.'புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சம் மீண்டும் வழங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளது. 'கட்டணமில்லா சிகிச்சை' என அறிவித்து விட்டு, 'கண் புரை அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.45 ஆயிரம்தான் வழங்க முடியும்' என அறிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். இது கட்டணமில்லா சிகிச்சை நோக்கத்திற்கு எதிரானது. சந்தா தொகை ரூ.120 என்பதை ரூ.180 ஆக உயர்த்தியது ஏற்புடையது அல்ல. சந்தா தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து ஊழியர் சங்கங்களுடன், அரசு பேச வேண்டும். திட்டத்தில் சேருவது குறித்து விருப்புரிமை கோர வேண்டும். மத்திய அரசு, தெலுங்கானா, கர்நாடகா போன்று இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி