Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 8, 2016

இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!

இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது. இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்துக்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்துக்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி