Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 2, 2016

காந்திகிராம திறந்தநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை.

காந்திகிராம பல்கலை தேசிய திறந்தநிலை பள்ளி மூலம் 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காந்திகிராம பல்கலையின் வாழ்நாள் கல்வித்துறை சார்பில், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுகிறது. இதில் 10ம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி சேர்க்கை துவங்கியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடந்து வருகின்றன. முன்பு பாடநூல்கள் ஆங்கில மொழியிலும், தேர்வுகளை தமிழில் எழுதும் முறை இருந்தது.தற்போது மாணவர்கள் எளிதில் கற்று தேர்ச்சி அடைய பாடநுால்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. 14 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பள்ளிக் கல்வியை தொடர வாய்ப்பு இல்லாதவர்கள், வாய்ப்பை இழந்தவர்கள் தங்களது கல்வியை தொடர இது நல்வாய்ப்பு. இத்திட்டத்தில் சேர ஜூலை 30க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 93679 - 12611, 96774 - 82729 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி