Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 4, 2016

ஏழை மாணவியின் மருத்துவப் படிப்புக்கு ஜெயலலிதா உதவி


ஏழை மாணவி மேகலாவின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, முதலாண்டு கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை மேகலாவிடம் வழங்கினார்.இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

''புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், கீரமங்கலம், அணவயல் பூசாரியைச் சேர்ந்த மாணவி மேகலா, தனக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள நிலையில், தானும், தனது குடும்பமும் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வருவதாகத் தெரிவித்து, மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்தார்.இக்கோரிக்கையை ஏற்று முதல்வர், மாணவி மேகலாவின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

அதன்படி இன்று மேகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்தார்.முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ.75 ஆயிரத்துக்கான வரைவோலையை அம்மா நல அறக்கட்டளையில் இருந்து வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.முதல்வருக்கு மேகலாவும், அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி