Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 26, 2016

விதிவிலக்கு உண்டோ...???

விதிவிலக்கு உண்டோ...???

தலைமைச் செயலக அதிகாரிகள் முதல் ... மாவட்ட ஆட்சியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் அரசின் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுகின்றனர் ( 10,22,000 பேர் )...

அப்படியிருக்க கீழ்மட்ட அரசு ஊழியர்கள் மட்டும் தனக்கான மருத்துவ காப்பீடுத் தொகை நிராகரிக்கப்படுவதாகவும், சொற்ப அளவில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூப்பாடு போட்டவண்ணம் உள்ளனர்..

உயர் அதிகாரிகளும் இந்த திட்டத்தின் கீழ் தான் வருகின்றனர்..

ஆனால், அவர்கள் இது தொடர்பாக எந்தவித குற்றச்சாட்டையும் இதுவரை முன்வைத்ததாக தெரியவில்லையே....???

செல்வாக்குடைய உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த திட்டத்தில் விதிவிலக்கு ஏதேனும் இருக்குமோ....???

இல்லை பொருளாதாரம் தந்த வாழ்கையால் இதை கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனரா...??

வீதியில் இறங்கிப் போராடும் கீழ்மட்ட அரசு ஊழியர்களின் பொருளாதாரச் சூழ்நிலை தான் இந்த கூப்பாட்டிற்கு காரணம் என்று நினைத்துவிட வேண்டாம்...???
(நிதானிக்கவும்..)

பொருளாதாரம் இருக்கு, இல்லை..
அது பிரச்சனை இல்லை...

இது எங்களின் உரிமை.. 
இதை விட்டுக்கொடுக்கவோ..
பிச்சையாக பெறுவதையோ எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது...

நமக்கான உரிமையை பிச்சையாக பெற முடியாது தோழர்களே..

நாம் சார்ந்துள்ள அமைப்பிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து விரைவில் உரிமையை மீட்டெடுப்போம்..

கீழ்மட்டத்தில் நாம் கொடுக்கும் நெருக்கடிகள் மட்டுமே, மேல்மட்ட இயக்கவாதிகள் இந்த கோரிக்கையை மையமாக வைத்து வீரியம் மிக்க போராட்டத்தை வடிவமைக்க வழிவகை செய்யும்..

ஒன்றுபடுவோம், போராடுவோம்..
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வோம்..

தோழமையுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி