sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 7, 2016

மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு.

7 வது  ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகள்குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதியளித்தது.இதையடுத்து, ஜூலை 11-ஆம் தேதி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அவை குறித்து பரிசீலிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகே, உயர்மட்டக் குழு அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி