Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 3, 2016

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்?சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவு!

டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி உரிமைக்கான பெற்றோர் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி கடந்த 2006-ல் தாக்கல் செய்துள்ள அறிக்கைப்படி, குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக்கல்விச் சட்டம்-2009 பிரிவு 11-ன் கீழ் அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை தொடங்கவில்லை. எனவே அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளைத் தொடங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.மீனாட்சி தனது வாதத்தில், ''அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி போன்ற ஆயத்த கல்விக்கான வகுப்புகள் இல்லை. இதனால் பெற்றோர்களின் மோகம் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கடந்த 2014-ம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே பள்ளிகல்வித்துறை அறிவித்து இருந்தது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை'' என்றார்.அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் டி.என்.ராஜகோபாலன் தனது வாதத்தில், ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி பள்ளிகள் உள்ளன. அதன்பிறகே குழந்தைகள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்'' என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ''அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க முடியுமா? என்பது தான் எங்களின் கேள்வி. எனவே டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி ஏற்கெனவே கடந்த 2006-ல் அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடங்க முடியுமா? என்பது குறித்தும் அதற்கான வாய்ப்புகள் குறித்தும் தமிழக அரசு 4 மாதத்துக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

12 comments :

 1. Updated Video
  Algae General Characters / Algae important points
  PG TRB Announcement Comming soon
  PG Assistance Exam 2015-2016
  Important points
  Video Format
  Visit here :-
  https://youtu.be/nVAhT822sU8

  ReplyDelete
 2. Updated Video
  Algae General Characters / Algae important points
  PG TRB Announcement Comming soon
  PG Assistance Exam 2015-2016
  Important points
  Video Format
  Visit here :-
  https://youtu.be/nVAhT822sU8

  ReplyDelete
 3. Updated Video
  Algae General Characters / Algae important points
  PG TRB Announcement Comming soon
  PG Assistance Exam 2015-2016
  Important points
  Video Format
  Visit here :-
  https://youtu.be/nVAhT822sU8

  ReplyDelete
 4. நல்லது அரசு பள்ளிகள் மென்மேலும் மேன்மை பெறும்

  ReplyDelete
 5. நல்லது அரசு பள்ளிகள் மென்மேலும் மேன்மை பெறும்

  ReplyDelete
 6. எல்.கே. ஜி. யு.கே.ஜி. தொடங்கினால் மட்டும் போதாது தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பினால் மட்டுமே சாத்தியமாகும்.

  ReplyDelete
 7. நிதி இல்லை என்று பதில் சொல்வார்கள்

  ReplyDelete
 8. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

  ReplyDelete
 9. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

  ReplyDelete
 10. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

  ReplyDelete
 11. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

  ReplyDelete
 12. ஏன்டா திரும்ப திரும்ப ஒரே தகவலை பதிவு பண்றீங்க ???
  உங்கள் விளம்பர. ---- பார்த்தாலே கடுப்பாகுது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி