Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 30, 2016

உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:
பல்கலை மானியக்குழு விதிகள்படி பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்காக மாநில அளவிலான தகுதித் தேர்வு (டி.என்.எஸ்.இ.டி.,) நடத்தப்படுகிறது. நான் எம்.பில்., படித்துள்ளேன். 2016 பிப்., 21ல் மாநில தகுதித் தேர்வில் பங்கேற்றேன். ஐந்து மாதங்களாக தேர்வு முடிவு வெளியாகவில்லை.தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை கோரி தமிழக உயர்கல்வித்துறை செயலர் மற்றும் மாநில தகுதித் தேர்வு உறுப்பினர் செயலருக்கு, மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதி டி.ராஜா, 'தேர்வு முடிவை, நான்கு வாரங்களில் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

6 comments :

  1. Thanks to anthonykumar sir. nearly 20000 edcationists waiting for this SET2016 result.

    ReplyDelete
  2. Thanks sir....set organisers ashamed of themselves

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி